டில்வினின் கூற்றை மீண்டும் நிராகரித்த அமைச்சர் நலிந்த!
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவசரத் தேர்தல் ஒன்று அழைக்கப்பட்டால் அதற்கும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.