யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.
தீயணைப்பு நடவடி
தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- இராமலிங்கம் சந்திரசேகரினதும்
- ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும்
- மருதலிங்கம் பிரதீபன்
நிறுவனங்கள்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
- பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
இடங்கள்- மணற்காடு சவுக்கங்காட்டில்
- சவுக்குக்காட்டில்
- மணற்காட்டுப்
- மருதங்கேணி
- Jaffna
திறவுச்சொற்கள்- உலங்குவானூர்தி
- கட்டுப்படுத்த
- நடவடிக்கை
- அபாயமும்
- தொடரும்
- மூலம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.