இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டிற்கு வடகிழக்காக வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலவிய தாழமுக்கமானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
