வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
Perpetual Treasuries நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் மேலும் 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.இன்று(05) மாலை 4.30 முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளை சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளை சட்டம் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இலங்கை மத்திய வங்கி 2017 ஜூலை 06ஆம் திகதி முதன்முறையாக Perpetual Treasuries நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததுடன், அன்றிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு 06 மாதங்களுக்கும் இந்த இடைநிறுத்தம் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
