வரலாற்று சாதனை படைத்த ருமேஷ் தரங்க
இலங்கையின் ஈட்டி எறிதல் சம்பியன் ருமேஷ் தரங்க டயமண்ட் லீக் சம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்துள்ளார். டயமண்ட் லீக் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் அவர் வெற்றி பெற்றார். பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில் ருமேஷ் தரங்க 89.04 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து ஆற்றலை வௌிப்படுத்தி டயமண்ட் லீக் பட்டத்தை வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்று பெருமையை பெற்றுக் கொண்டார். ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-560099.jpg)