1 ஊடகம்
புனர்வாழ்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தாமாக முன்வந்து புனர்வாழ்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் காரணமாக அவர்களுக்கு போதைப்பொருள் கிடைக்கும் சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவு பணிப்பாளர் ஓய்வு பெற்ற கமாண்டர் ஷாந்த கமகே தெரிவித்துள்ளார்.
