கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
உடல் ரீதியிலான சவால்களைத் தமது கல்விக்கனவுகளுக்குத் தடையாகக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை' விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று (12) நடைபெற்றது.
