லொறி - மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் நுணாவில் சந்தி பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.நாவற்குழி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவரே விபத்திர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
