பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்" வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பு நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
