சுரக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் புதிய மருத்துவ நலன்கள்
பல்வேறு காரணங்களால் கல்விக்கு தடைகள் ஏற்படுகின்ற மாணவர்களுக்கு அத்தடைகளைக் கடந்து சென்று தொடர்ச்சியாக கல்வியைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குகின்ற முக்கிய நோக்கத்துடன் சுரக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பாடசாலைகள், அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமை காணப்படுகின்றது. குறித்த மாணவர் காப்புறுதி வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா இன்ஸ்சூரன்ஸ் கோபரேஷன் ஜெனரல் லிமிட்டட் இற்கிடையில் தற்போது வலுவிலுள்ள ஒப்பந்தம், 2026.09.01 ஆம் திகதி தொடக்கம் 2027.08.31 ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதிக்குரிய கீழ்க்காணும் புதிய அனுகூலங்களையும் உள்ளடக்கி, திருத்தம் செய்து அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கேள் கருவிகள் (Hearing Accessories) திருத்தம் செய்வதற்கும் மற்றும் அதற்குச் செலவாகும் செலவுக் கட்டணங்களுக்கு 75,000/- வரையான அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கல் Chronic Kidney Diseases மற்றும் Chronic Inflammatory Arthritis போன்ற நோய்களுக்கான நீண்டகாலமாக மருந்துகளை உட்கொள்கின்ற மாணவர்களுக்கு 20,000/- ரூபா வரையான அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கல் Malignancy Screening Test for Skin Cancer and Post-transplant Lymphoproliferative Disorder (PTLD), Screening Test for Osteoporosis, Screening Test for Hepatitis B, Hepatitis C ό HIV போன்ற பரிசோதனைகளுக்கான செலவுகளுக்கு 20,000/- ரூபா வரையான அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கல். தீவிர நோய்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள 'Cancer Treatment' எனும் 'Cancer Treatment and related Testing' எனத் திருத்தம் செய்தல் மற்றும் திடீர் விபத்துக்களால் ஏற்படக்கூடிய இடுப்புப் பகுதி, தோள்பட்டை மற்றும் முழங்கால் மூட்டுக்களை மீளமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சத்திரசிகிச்சைகள் மற்றும் PET Scan இற்கான செலவுகள் தீவிர நோய்கள் வகுதிக்குள் உட்சேர்த்தல். பாடசாலை வளாகத்தில் அல்லது வெளியில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற மற்றும் கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளின் போது (கல்விச் சுற்றுலா மற்றும் விளையாட்டுக்களின் போது) திடீர் விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கு திடீர் விபத்து வகுதியின் கீழ் 100,000/- ரூபா தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கல்.
