சீனாவில் நடுத்தெருவில் மண்டியிட்டு யாசகம் பெறும் ரோபோ!
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Unitree என்ற நிறுவனம் தயாரித்த G1 ரக மனித உருவ ரோபோ கைகளை கூப்பி பிச்சை கேட்பது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அதன் முன்னால் பணம் போடுவதற்கான ஒரு தட்டும், டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதற்காக ஒரு QR Code-ம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திர சம்பவம் சிச்சுவானில் மட்டுமன்றி, சீனாவின் முக்கிய நகரங்களான செங்டூ, பெய்ஜிங், குவாங்சோ போன்ற பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.