மீன்பிடி படகிலிருந்து ஹெரோயின் மீட்பு
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்டு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பலநாள் மீன்பிடி படகிலிருந்து 298 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.அவற்றின் சந்தை பெறுமதி சுமார் 620 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை துல்லியமாக அளவிடும் பணிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் தலைமையில் தற்போது இடம்பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.நாட்டின் தென்மேற்கு ஆழ்கடலில் நேற்று(31) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 06 சந்தேகநபர்களுடன் குறித்த பலநாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
