இலங்கை - திமோர்-லெஸ்டே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மற்றும் கிழக்கு திமோர்வெளிநாட்டு அமைச்சர் இடையே சந்திப்பு
இலங்கை - திமோர் - லெஸ்டே இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பெண்டிட்டோ டோஸ் சான்டோஸ் ஆகியோருக்கு இடையேயான இருதரப்பு கலந்துரையாடல். தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக் குழுவின் 79வது அமர்வில் (RC79) பங்கேற்றுள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, திமோர்-லெஸ்டே நாட்டின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் மேதகு பெண்டிட்டோ டோஸ் சான்டோஸ் ஃபிரீட்டாஸ் அவர்களுடன் இன்று (08) இருதரப்பு கலந்துரையாடலை நடத்தினார்.
