இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங் மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு
பொது நிர்வாக மறுசீரமைப்பு, பிரதேச ஆட்சி, பேரிடர் மேலாண்மை, தூய்மையான குடிநீர் மற்றும் AI தொழில்நுட்பம் சார்ந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (28) நாராஹேன்பிட்டியிலுள்ள அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.
