பருத்தித்துறையில் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் - பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு (J/417), பொலிகண்டி தெற்கு (J/395) மற்றும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு (J/392) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று (12.09.2026) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர். கெளரவ பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாகக் திறந்துவைக்கப்பட்டன.
