மேஜர் கழக T20 சம்பியனாக முடிசூடிய தமிழ் யூனியன்
மேஜர் கழக T20 தொடரின் இறுதிப்போட்டியில் இளம் துடுப்பாட்ட வீரர் சினெத் ஜயவர்தனவின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் வெற்றிபெற்று சம்பியனாக மகுடம் சூடியது.
