1 ஊடகம்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கான சுமார் 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பயனாளிகளிடம் கையளித்தார்.
