அனர்த்தத்தின் பின்னரான காலத்தில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது உதவி வழங்குவதைத் தாண்டிய ஒரு அசாதாரணமான பொறுப்பைக் கொண்டுள்ளது
அப்பொறுப்பானது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் (விசேடமாக பெண்களும் சிறுவர்களும்) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களை உளவியல் ரீதியாக பலப்படுத்துவதுமாகும். எமது அமைச்சின் கீழ், பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலமான உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்தற் சேவை உள்ளது. இந்தச் சமூகங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான மனரீதியான தயார்நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் இவ் ஆற்றுப்படுத்தற்சேவையானது அதிகபட்சம் செயற்பட வேண்டும்.
