1 ஊடகம்
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக புதிய மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவின் நிருமாணப் பணிகள் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர் மற்றும் விவசாய நீர் நெருக்கடிக்கு விஞ்ஞான பூர்வமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், நீர் வழங்கல் சபையின் புதிய யாழ்ப்பாண சபை அலுவலகம் அல்லது மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை (முதலாம் கட்டம்) நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சுற்றாடல் அமைச்சர் மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் ஆகியோரின் பங்கு பற்றலுடன், நாளை (16) யாழ்ப்பாணம், கடற்கரை வீதி, இலக்கம் 665/6-இல் நடைபெறவுள்ளது.
