1 ஊடகம்
ரமேஷ் தரங்கவின் ஒலிம்பிக் பயணத்திற்கு உஸ்வத்த பிஸ்கட் நிறுவனம் அனுசரணை
இலங்கை தடகள வரலாற்றில் சாதனை படைத்த ஈட்டி எறிதல் விளையாட்டு வீரரான ரமேஷ் தரங்க பத்திரகேயின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக உஸ்வத்த பிஸ்கட் தனியார் நிறுவனம் இணைந்து கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பாராட்டு மற்றும் கெளரவிப்பு விழா, ரமேஷ் தரங்கவின் பிறப்பிடமான கென்னாத்துடாவிலுள்ள வின்ரோ வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி நடைபெற்றது.
