உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்27 மார்., 2026

ஈரானுக்கு 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போலிச் செய்திகளை உருவாக்கும் ஊடக நிறுவனங்களும் ஏனைய நபர்களும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்ற போதிலும் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். ஏப்ரல் 6ஆம் திகதி இரவு 8 மணியுடன் அந்த கால அவகாசம் நிறைவடைவதாக ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய இலங்கை நேரப்படி ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 இற்கு அந்த காலஅவகாசம் நிறைவடையவுள்ளது. ஈரான் 48 மணித்தியாலங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பதாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தார். குறித்த கால அவகாசம் நிறைவடைவதற்கு சுமார் 12 மணித்தியாலங்கள் எஞ்சியிருந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அந்நாட்டின் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்தார். ஈரானுடன் 2 நாட்களாக நடைபெற்று வரும் நீண்ட மற்றும் செயற்றிறனான பேச்சுவார்த்தைகளே தாக்குதல்கள் ஒத்திவைக்கப்பட காரணம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஈரான் அந்த அறிவிப்புகளுக்கு பாரிய எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வந்த பின்னணியில் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதற்கு ஈரான் பிரதிநிதிகள் அச்சமடைந்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த பதிவினை இட்டபின்னர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொக்ஸ் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியொன்றுடன் தொலைபேசி ஊடாக இணைந்துகொண்டார். ஈரான் தன்னிடம் 7 நாட்கள் கால அவகாசம் கோரிய போதிலும், அவர்களிடமிருந்து எரிபொருள் பரிசொன்று கிடைத்தமையால் அந்த கால அவகாசத்தை 10 நாட்கள் வரை நீடிக்க தாம் தீர்மானித்ததாக இதன்போது கூறினார். இது தொடர்பில் ஈரான் மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். ட்ரம்ப்பின் புதிய அறிவிப்புகள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.ட்ரம்ப் கூறிய ஈரானின் பரிசுப் பொருள்அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதிய உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளராக மார்க்வைன் முல்லின் பதவியேற்கும் நிகழ்வின் போது, ஈரான் அமெரிக்காவிற்கு அனுப்பிய ஏதோவொரு பரிசுப் பொருள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். அது என்னவென்று ஊடகவியாளர்கள் வினவியபோது அதற்குப் பதிலளிக்க மறுத்த அமெரிக்க ஜனாதிபதி அந்த பரிசுப் பொருள் தொடர்பாக வெளிப்படுத்தினார். ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக, டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமெரிக்க அமைச்சரவை கூடிய சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் மீதான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் மசகு எண்ணெய் பீப்பாய்களை ஏற்றிய 8 எரிபொருள் கப்பல்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக ஈரான் பிரதிநிதிகள் குறிப்பிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார். தாம் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தவிட்டாலும் பாகிஸ்தான் கொடியின் கீழ் பயணிக்கும் 8 எரிபொருள் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதாக செய்தியறிக்கையொன்றில் தாம் பார்த்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். இதனிடையே ஈரான் விடுத்த பிழையான அறிக்கைக்காக மன்னிப்புக் கோரும் வகையில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தாம் வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் நகைச்சுவையாகக் கூறியமை அமைச்சரவையை சிரிக்க வைத்தது. ஈரான் ஆட்சியின் 47 வருட வரலாற்றில் இதுவே அவர்களின் பலவீனமான காலம் என அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். இதேவேளை, பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்குப் செல்வதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஈரான் மீது தரைவழி ஆக்கிரமிப்பின்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியுமா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வியெழுப்பினர். எனினும், மார்கோ ரூபியோ அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். ஈரான் தரப்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது யார் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அவர் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்து விட்டார்.ஈரானின் குற்றச்சாட்டுகள்அமெரிக்கப் படைகள் வளைகுடா பிராந்திய அமைப்பு நாடுகளின் மக்களை பணயமாகப் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தபோதிலும் போர் ஆரம்பித்ததிருந்து அமெரிக்கப் படையினர் அந்தத் தளங்களை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தங்கியுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்திய அமைப்பில் பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.ஈரானின் இராணுவ நடவடிக்கைகள்அமெரிக்காவால் முன்னெடுக்கப்படக்கூடிய தரைவழி ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளத் தயாராவதற்காக ஈரான் சுமார் ஒரு மில்லியன் இராணுவத்திற்காக பொதுமக்களை திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கீழ் இயங்கும் பசிஜ் துணை இராணுவக் குழுவின் நிலையங்களுக்கு நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் தாமாக முன்வந்து இணைவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிரி நாடொன்று பிராந்திய நாடொன்றின் ஒத்துழைப்புடன் ஈரானின் தீவொன்றைக் கைப்பற்றத் தயாராகி வருவதாக ஈரானின் சபாநாயகர் எக்ஸ் தளத்தில் நேற்றுமுன்தினம் பதிவிட்டிருந்தார். ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய நிலைமைஇதனிடையே ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கு மலேசிய கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனது நாட்டு கப்பல்கள் இந்த கடல் மார்க்கத்தைப் பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே அனுமதி வழங்கியமைக்காக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.சர்வதேச அரசியலில் எந்தவொரு பக்கமும் சாராத கொள்கையைப் பின்பற்றும் மலேசிய அரசாங்கம் இந்த கடல் மார்க்கம் ஊடாக எத்தனை கப்பல்கள் பயணித்தன அல்லது அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் மேலதிக கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்துக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

News First - தமிழ்•27 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

அது என்னவென்று ஊடகவியாளர்கள் வினவியபோது அதற்குப் பதிலளிக்க மறுத்த அமெரிக்க ஜனாதிபதி அந்த பரிசுப் பொருள் தொடர்பாக வெளிப்படுத்தினார். இதேவேளை, பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்குப் செல்வதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஈரான் மீது தரைவழி ஆக்கிரமிப்பின்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியுமா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வியெழுப்பினர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ொனால்ட் ட்ரம்ப்
  • ட் ட்ர
  • டின்
நிறுவனங்கள்
  • பொக்ஸ் செய்தி நிறுவன
இடங்கள்
  • United States
  • Sri Lanka
  • ஈரா
திறவுச்சொற்கள்
  • கப்பல்கள்
  • அவகாசம்
  • கொடுத்த
  • நாட்கள்
  • பரிசுப்
  • கால

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.