நாட்டை வந்தடையும் மற்றுமொரு மசகு எண்ணெய் கப்பல்
மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.9750 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை ஏற்றிய கப்பலே வருகை தருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயுர நெத்திகுமார தெரிவித்தார்.கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் இவ்வாறு எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலுமொரு எரிபொருள் ஏற்றிய கப்பல் இந்த மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமார குறிப்பிட்டார்.இதனிடையே, அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று அடுத்த மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.அதற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மயுர நெத்திகுமார கூறினார்.45 நாட்களில் குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
-614476-555385.jpg)