நாட்டின் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
- நாட்டின் சில பகுதிகளில் மனித உடலினால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அதிக வெப்பமான வானிலை ஏப்ரல் மாதத்திலும் பதிவாகக் கூடும் என மேற்கு அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் நிபுணர் பேராசிரியர் சரித பட்டிஆரச்சி தெரிவித்துள்ளார். நிலவும் வெப்பமான வானிலையில் சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதை தவிர்க்குமாறு கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். வெப்பம் அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் சிறுவர்களை நிழலான இடங்களில் அல்லது வீட்டில் வைத்திருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சிறுவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைவடைவதனால் ஏற்படும் நோய் நிலைமைகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
.jpg)