சிகையலங்கார விவகாரம் - 5 பேர் கைது
ராகமை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவரை அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரினால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ராகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான சந்தேகநபருடன் இராஜாங்கனை, கடவத்தை, ராகமை மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்த 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை வைத்தியசாலைக்கு அனுப்பியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
-614586-555438.jpg)