புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாத்தல்: வலுவான உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அழைப்பு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான குடிபெயர்வு வழிமுறைகள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார். "புலம்பெயர்வோர் பாதுகாப்பு: தெற்காசியா-வளைகுடா குடிபெயர்வு வழித்தடத்தில் சமூகப் பாதுகாப்பை முன்னேற்றுதல்" என்ற தொனிப்பொருளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) STREAM அறிமுகப் பயிற்சி இன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பதில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
