1 ஊடகம்
பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி
வாதுவை, மெலேகம பகுதியில் இன்று(24) காலை 02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்போது காயமடைந்த இரு பஸ்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனிடையே பன்னிப்பிட்டிய, மடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
