1 ஊடகம்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயார் நிலையில்
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கை கடற்படையின் 171 அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று (22) காலை நிலவரப்படி, சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மூன்று (03) அனர்த்த நிவாரணக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
