தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான புதிய விலை
தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, டூனா, மெக்கரல் மற்றும் ஜக் மெக்கரல் ஆகியவற்றிற்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 155 கிராம் டூனா மீன் அடங்கிய டின்மீன் ஒன்றின் அதிகப்பட்ச சில்லறை விலை 220 ரூபாவாகும். 425 கிராம் டூனா மீன் அடங்கிய டின்மீன் ஒன்றின் அதிகப்பட்ச சில்லறை விலை 510 ரூபாவாகும். 155 கிராம் மெக்கரல் மீன் அடங்கிய டின்மீன் ஒன்றின் அதிகப்பட்ச சில்லறை விலை 240 ரூபாவாகவும், 425 கிராம் மெக்கரல் மீன் அடங்கிய டின்மீன் ஒன்றின் அதிகப்பட்ச சில்லறை விலை 540 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 155 கிராம் ஜக் மெக்கரல் மீன் அடங்கிய டின்மீன் ஒன்றின் அதிகப்பட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும், 425 கிராம் ஜக் மெக்கரல் மீன் அடங்கிய டின்மீன் ஒன்றின் அதிகப்பட்ச சில்லறை விலை 600 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய விலைகள் அமுலுக்கு வரும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
