இலங்கையை ‘B-’ நிலைக்குத் தரம் உயர்த்தியது பிட்ச் நிறுவனம்: பொருளாதார ஸ்திரத்தன்மையில் எட்டப்பட்ட முன்னேற்றத்திற்கான அங்கீகாரம்
இலங்கையின் பெருநிலைப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளநிலைநிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட அர்ப்பணிப்பான மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் பலன்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளதை இலங்கை வர்த்தக சம்மேளனம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய வெளியீட்டாளர் இயல்புநிலைத் தரவரிசையை (Long-Term Foreign-Currency Issuer Default Rating) 'CCC+' என்பதிலிருந்து 'B-' ஆக உயர்த்தியிருப்பதிலும், நாட்டின் எதிர்காலப் பார்வையை 'ஸ்திரமானது' (Stable Outlook) எனக் குறிப்பிட்டிருப்பதிலும் இந்த சாதகமான முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
