தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து சமல் விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் பதவியை டொக்டர் சமல் சஞ்சீவ இராஜினாமா செய்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் ஊடாக அவர் அறிவித்துள்ளார்.இதனை தவிர கட்சியின் சுகாதாரக் குழு, சிவில் அமைப்புகளின் குழு மற்றும் ஊழல் எதிர்ப்பு குழுக்களின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் தாம் விலகுவதாகவும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர சபை உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவதாகவும் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
