1 ஊடகம்
- தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி ஆரம்பம் -
பாடசாலைக் கண்காட்சி, "Welcome to Our Mosque" (எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம்) நல்லிணக்க நிகழ்ச்சி மற்றும் அல்-ஹிலால் வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடம் என்பன திறந்து வைக்கப்பட்டன. 42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு மூன்று நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
