2 ஊடகங்கள்
பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்!
இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
