1 ஊடகம்
“மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான சமூக விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும்” — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகள் மிகவும் உணர்வுபூர்வமான பிள்ளைகள் பிரிவினராக இருப்பதால், அவர்கள் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களுக்கு உள்ளாகாத வகையில், அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான சமூக விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய தரப்பினரை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
