1 ஊடகம்
பாராளுமன்றம் ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (26) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
