பன்முக வறுமையை ஒழிக்கும் “சமூக சக்தி” செயற்றிட்டம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு
வறுமை என்று கூறுகின்ற போது பொருளாதார ரீதியான வறுமையை மட்டும் கருதாமல், பன்முக வறுமையை ஒழிக்கும் செயற்றிட்டமாக "சமூக சக்தி" செயற்றிட்டம் அமைந்துள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தின் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (02.06.2026) நடைபெற்ற மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
