இலங்கைக்கு அண்மையாக விருத்தியடைந்த தாழமுக்க மண்டலம் மேற்குத் திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது..
2026 ஒக்டோபர் 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கைக்கு அண்மையாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்குத் திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனினும் இத் தொகுதியின் தாக்கம் இன்றும் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில பிரதேசங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
