ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயனடைந்த Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன "க்ளீன் ஸ்ரீ லங்கா - ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் அண்மையில் (2025 டிசம்பர் 12) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டார்.
