1 ஊடகம்
பரிசுத்த பாப்பரசருக்கு ஜனாதிபதி அனுர அழைப்பு
பரிசுத்த பாப்பரசர் 14ஆம் லியோவை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று(02) வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகள் விவகார பிரதி செயலாளர் Mihăiță Blaj-யை சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பை சமர்ப்பித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
