சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற வாசனைத் திரவியங்களுடன் 05 சந்தேகநபர்கள் கற்பிட்டி கடற்பரப்பில் கைது
இலங்கை கடற்படையினர், கற்பிட்டி பத்தலங்குண்டுவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் நேற்று (2026 செப்டம்பர் 20) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஏலக்காய் மற்றும் இஞ்சி அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் உரைகளை ஏற்றிச் சென்ற பல நாள் படகு (01) ஒன்றுடன் ஐந்து சந்தேகநபர்களை (05) கடட்படையினர் கைது செய்தனர்.
