உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்20 மே, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு

278 பேரின் உயிரர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், அன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் சென்றிருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து ஒருவார காலத்திற்குள் பிணை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் அங்கு தெரிவித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சட்ட மாஅதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று(20) அறிவித்துள்ளார்.சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த போதே, இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பல முக்கிய விபரங்களை வெளிப்படுத்தினார்.2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே நீதிமன்றில் இன்று(20) மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 02 சந்தேகநபர்களும் Zoom ஊடாக நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய 14 பக்க அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுள்ளார் என்பது முறைப்பாட்டாளர்களின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய அசாத் மௌலானாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 அதிகாரிகள் பிரான்ஸிற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே, 2017ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரிடமிருந்து ஏதேனும் ஒரு செயலுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் என்பது அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்தமை தொடர்பாகவும் இதன்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.பிள்ளையான் உள்ளிட்ட குழுவினரையும் சஹ்ரான் உள்ளிட்ட அவரது குழுவையும் பராமரிப்பதற்கு இராணுவப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் உள்ள மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேயை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.சுரேஷ் சலே சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, பிரான்ஸில் வசிக்கும் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் ஒரு சாட்சியம் அல்ல என தெரிவித்தார்.இதேவேளை, விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி வழங்கப்படும் பட்சத்தில், அசாத் மௌலானா இலங்கைக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில், சுரேஷ் சலே உள்ளிட்ட இராணுவ புலனாய்வு பிரிவினருக்கும் சஹ்ரானின் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து கலந்துரையாடல்களின் போதும் தான் குறிப்புகளை எடுத்திருந்ததாகவும் அத்தகைய குறிப்புகள் அடங்கிய 05 புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சுரேஷ் சலேவை வழக்கு விசாரணையன்று பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது குறித்த உத்தரவு அடுத்த வழக்கு தவணையின் போது அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.அத்துடன், நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்த உத்தரவும் அன்றைய தினமே வழங்கப்படும் என நீதவான் குறிப்பிட்டார்.இதற்கமைய வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

News First - தமிழ்•20 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 02 சந்தேகநபர்களும் Zoom ஊடாக நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுள்ளார் என்பது முறைப்பாட்டாளர்களின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சஹ்ரான் ஹாஷிமின்
  • மஹிந்த ராஜபக்ஸ
  • சில் ராஜபக்ஸ
  • ாமல் ராஜபக்ஸ
நிறுவனங்கள்
  • கோட்டை நீதிவான் நீதிமன்றில்
  • அரச புலனாய்வு பிரிவு
இடங்கள்
  • Eastern Province
திறவுச்சொற்கள்
  • வௌிக்கொணர்வு
  • சொலிசிட்டர்
  • விசாரணையில்
  • ஈஸ்டர்
  • சுரேஷ்
  • பீரிஸ்
  • அசாத்
  • திலீப
  • சலே

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.