1 ஊடகம்
கட்டுநாயக்க, சீதுவ பகுதிகளில் 4 சந்தேகநபர்கள் கைது
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட 21 கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கம்பஹா - பெம்முல்ல பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
