இலங்கையில் யானை வழித்தடங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியின் மொத்த நீளம் 5,787.89 கிலோமீற்றர் என சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார். குறித்த பிரதேசங்களின் பௌதீக நிலைமைகளுக்கு ஏற்ப, வனப் பாதுகாப்புப் பிரதேசங்களின் எல்லைகளை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான மின்சார வேலிகள் அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யானை-மனித மோதல் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண்பதற்காக 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில், அமைச்சரவை அங்கீகாரத்துடன் 27 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மின்சார வேலிகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் 2025ஆம் ஆண்டில் 618.89 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- எல்.எம். அபேவிக்ரமவினால்
- தம்மிக்க பட்டபெந்தி
- வைத்தியர்
திறவுச்சொற்கள்- வழித்தடங்கள்
- உள்ளடக்கும்
- கிலோமீற்றர்
- அவற்றைச்
- சூழவுள்ள
- பகுதிகளை
- மின்சார
- நீளமான
- யானை
- வேலி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.