தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது
குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மென்பொருளொன்றை கட்டமைப்பதற்காக 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக சந்தேகநபர் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனினும், அவ்வாறான எந்தவொரு மென்பொருளும் கட்டமைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
