எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை குற்றவாளிகள் முறையாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் - ஜனாதிபதி
ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் நோக்கத்திற்கு இணங்க, இந்த நாட்டை ஒரு நாகரீகமான நாடாக மாற்றுவோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடம் நீக்கப்படும். நீண்டகால நிலையான பயணத்தில் நாடு கால்பதித்துள்ளது பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம் அந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு அரசாங்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை எனவும், குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு நிறைவேற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
