பெக்கோ சமன் தாய் கொலை: சந்தேகநபர் கைது
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனின் தாய் சுட்டு கொல்லப்பட்டமைக்கு உதவிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியை சேர்ந்த 21 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹெரரோயினுடன் குறித்த சந்தேகநபர் மித்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, விசாரணைகளுக்காக நேற்று (23) வரை காவலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போது, பெக்கோ சமனின் தாய் சுட்டு கொல்லப்பட்டமைக்கு உதவியமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமையும் வௌிக்கொணரப்பட்டுள்ளது.சந்தேகநபர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 12 ஆம் திகதி மித்தெனிய, உல்ஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த பெண் மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமன் தற்போது பூஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
