திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிளாஸ்டிக் – பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின் ஏற்பாட்டில் (24) மாவட்ட செயலக வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் இல்லா சூழல் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
