1 ஊடகம்
ஆணமடுவை ஆதார வைத்தியசாலையில் ரூ. 50 மில்லியன் செலவில் 4 நோயாளர் விடுதிகள் புணரமைப்பு
ஆணமடுவை ஆதார வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பிரதேசவாசிகளுக்கு அதிக செயல்திறன்மிக்க உயரிய சுகாதார சேவையொான்றை வழங்கும் நோக்கில் செயற்படுத்தப்படும், 4 மருத்துவமனை வார்டுகளை புணரமைக்கும் வேலைத்திட்டம், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபயரத்னவின் தலைமையில் அண்மையில் (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
