QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம்
இன்று(15) காலை 06 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.முன்னர் QR குறியீட்டை பெற்று மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் நபர்கள் எவ்வித சிக்கலுமின்றி QR குறியீட்டை புதுப்பித்துக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்துள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை விரைவாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்காக எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இன்று(15) பிற்பகல் தீர்மானம் எடுக்கப்பட்டு இன்றைய தினத்திற்குள் அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் கூறியுள்ளது.ஒருவார காலத்திற்கான எரிபொருள் கோட்டா வௌியிடப்பட்டுள்ளது.பஸ் - 60 லீட்டர்மோட்டார் சைக்கிள் - 05 லீட்டர்வேன் - 40 லீட்டர்கார் - 15 லீட்டர்முச்சக்கர வண்டி - 15 லீட்டர்லொறி - 200 லீட்டர்ட்ரெக்டர் - 25 லீட்டர்விசேட நோக்கங்களுக்கான வாகனங்கள் - 40 லீட்டர்Quadricycle - 05 லீட்டர்
