கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளை அச்சிட்டு வந்த நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார். சுமார் ஒரு வருட காலமாக இந்தச் சட்டவிரோதத் தொழில் இடம்பெற்று வந்துள்ளதோடு, சாதாரண சான்றிதழ்களைச் சந்தேகநபர் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 200 பேர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக்
- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
- இலங்கை பரீட்சைத் திணைக்களம்
- தனியார் வங்கியொன்று
இடங்கள்- ராஜசிங்க மாவத்தையிலுள்ள
- ஸ்ரீ ஜயவர்தனபுர
- ஊவா வெல்லஸ்ஸ
- இம்புல்கொட
- Sri Lanka
- மொரட்டுவை
- Gampaha
- ரஜரட்ட
திறவுச்சொற்கள்- சான்றிதழ்களை
- நபரொருவரைக்
- நிலையமொன்றை
- அச்சிட்டு
- பெருமளவான
- தயாரித்த
- முற்றுகை
- போலிச்
- மையம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.