பாகுபாடின்றி அனைவருக்கும் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமமாக நீதியை அணுகுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (24) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர், தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்.
